கடந்த 2017 ஆம் ஆண்டு டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுகிடைய ஏற்பட்ட ஒப்பந்தம், மீண்டும் சில நாட்களுக்கு முன்னதாக டொயோட்டா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம், மாருதியின் சியாஸ், எர்டிகா , பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களை தனது சொந்த பேட்ஜில் தயாரித்து இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா பிரெஸ்ஸா எஸ்யூவி
கடந்த பிப்ரவரி 2017-ல் டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட ஒபந்தத்தின் தொடர்ச்சியாக கடந்த வாரம் மேற்கொண்ட புதிய ஒப்பந்தம் ஒன்றில், புதிதாக மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரை , டொயோட்டா நிறுவனம், புதிய விட்டாரா பிரெஸ்ஸா காரை 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக புதிய சி செக்மென்ட் எம்பிவி கார் ஒன்றை தயாரிக்க திட்டமிடுள்ளது. இந்த காரை மாருதி நிறுவனமும், தனது பேட்ஜில் வெளியிட உள்ளது. டொயோட்டாவில் எலக்ட்ரிக் நுட்பங்கள் மற்றும் ஹைபிரிட் தொழிற்நுட்பங்களை மாருதி பெற்றுக் கொள்ள உள்ளது.
இரு நிறுவனங்களும் உதிரிபாகங்கள் முதல் நுட்பங்கள் என பல்வேறு விபரங்களை பகிர்ந்து கொள்ள உள்ளன.