க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கின் புதிய மாடலின் சோதனை ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய தண்டர்பேர்ட் 350, தண்டர்பேர்ட் 500 பைக்கில் பிஎஸ் 6 என்ஜின் இடம் பெற்றிருக்கலாம்.
நேற்றைக்கு , ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள் படங்கள் வெளியானதை தொடர்ந்து அடுத்து என்ஃபீல்டு தண்டர்பேர்டு படங்களை பவர்டிரிஃப்ட் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுதவிர , புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 மற்றும் 500 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய என்ஃபீல்டு தண்டர்பேர்ட் சிறப்புகள்
சில மாதங்களுக்கு முன்னதாக தண்டர்பேர்ட் மாடலில் அலாய் வீல் ஆப்ஷன் ஒற்றை இருக்கை என பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்ற தண்ர்பேர்டு எக்ஸ் விற்பனைக்கு வந்தது. தற்போது அடுத்த தலைமுறை தண்டர்பேர்டில் , மேம்படுத்தப்பட்ட பவர் , டார்க் வழங்கவல்ல புதிய என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 பைக்குகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.
கிளாசிக் பைக்கில் சோதனை செய்யப்பட்டதை போன்றே டிஸ்க் பிரேக் வலதுபுறம் மாற்றப்பட்டு, செயின் இடதுபுறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெயில் விளக்கு, முன் மற்றும் பின் மட்கார்டில் சிறிய மாற்றங்கள், மற்றும் எல்இடி ஹெட்லைட் புதுப்பிக்கப்பட்டிருக்கும். மேம்பட்ட ஷாக் அப்சார்பர் , இருக்கையின் சொகுசு தன்மை அதிகரிப்பு போன்றவற்றுடன் மாறுபட்ட புகைப்போக்கி என பல்வேறு அம்சங்களுடன் கிக் ஸ்டார்ட்ர் இல்லாத மாடலாக விளங்கலாம்.
பொதுவாக பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் கிக் ஸ்டார்ட்டரை இழக்க தொடங்கியுள்ளதால், என்ஃபீல்டு நிறுவனம், இதே செயற்பாட்டை ஒரு சில மாடல்களில் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.
image source – power drift