இந்தியாவில் குறைந்த விலை கம்யூட்டர் பைக் மாடலை விற்பனை செய்யும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், புதிய 100 சிசி என்ஜின் பெற்ற பஜாஜ் பிளாட்டினா 100 KS CBS பைக்கின் விலை ரூபாய் 40,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் மற்றும் 125சிசிக்கு குறைந்த திறன் பெற்ற என்ஜின் பெற்றவைகளுக்கு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படிருக்கும்.
பஜாஜ் பிளாட்டினா 100 KS CBS பைக்கின் சிறப்புகள்
கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க உள்ள புதிய பிளாட்டினா 100 கேஎஸ் சிபிஎஸ் மாடலில் 7.9hp மற்றும் 8.3Nm டார்க் வழங்கும் 102 சிசி என்ஜின் கொண்டதாக விளங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. குறைந்த விலை பஜாஜ் சிடி 100 பைக்கானது 32,000 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
11.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்ற இந்த பைக்கில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் கொண்டு சிபிஎஸ் ஆப்ஷன் நிரந்தரமாக இணைக்கப்பட்டு வந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாட்டினா 100 கேஎஸ், சிபிஎஸ் பற்றி கூறுகையில், ” சிறந்த மைலேஜ் மற்றும் சொகுசு தன்மை வழங்கவல்ல மாடலாக விளங்குகின்ற பிளாட்டின் பைக்கில் 100 கேஎஸ் மாடல் சிறந்த விலை மற்றும் தரம் மிகுந்த வாகனமாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.