விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான வசதிகள் பெற்றதாக மாருதி சுசூகியின் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு 1.5 லிட்டர் டீசல் என்ஜின் புதிதாக பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. தற்போது சந்தையில் உள்ள 1.3 லிட்டர் ஃபியட் நிறுவன என்ஜினுக்கு மாற்றாக இந்த என்ஜின் பொருத்தப்பட உள்ளது.
பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படாமல் கைவிடப்பட உள்ள ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக மாருதி கார் நிறுவனம், புதிதாக 95 ஹெச்பி மற்றும் 225 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜினை 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வடிவமைத்துள்ளது.
2019 விட்டாரா பிரெஸ்ஸா காரின் எதிர்பார்ப்புகள்
மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற எஸ்யூவி மாடலாக திகழ்ந்து வருகின்றது. மாதந்தோறும் 12,000க்கு மேற்பட்ட கார்களை இநிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த கார் மற்றும் டூ வீலர் சந்தை சரிவினை நோக்கி பயணித்து வரும் நிலையில் பிரெஸ்ஸா விற்பனை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், புதிதாக மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா மாடலை தயாரித்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களுக்குள் புதிய பிரெஸ்ஸா விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
குறிப்பாக தோற்ற அமைப்பில் முன் மற்றும் பின் பம்பர்கள், டெயில் லைட் உள்ளிட்டவற்றில் மாறுதல்களுடன், அடுத்து இன்டிரியரில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய மாருதி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய நிறத்திலான இருக்கை மற்றும் அப்ஹோல்ஸ்டரி பெற்றிருக்கும்.
முக்கிய மாற்றமாக விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த சில வாரங்களுக்குள் புதிய பிரெஸ்ஸா அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.