ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ்: வரும் மார்ச் 26-ம் தேதி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய புல்லட் ட்ரையல்ஸ் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 என இரு வகைகளில் கிடைக்க உள்ளது. கிளாசிக் மாடலின் உந்துதலில் பல்வேறு மாற்றங்களை பெற்ற புல்லட் ட்ரையல்ஸ் மோட்டார்சைக்கிளில் 350சிசி என்ஜின் மற்றும் 500சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் பைக்கின் விபரம்
முன்பாகவே பல கட்டங்களில் சோதனை ஓட்ட படங்கள் உட்பட என்ஜின் தொடர்பான முக்கிய விபரங்கள் என அனைத்தும் வெளியாகியுள்ள நிலையில் அதிகார்வப்பூர்வமாக ட்ரையல்ஸ் மாடலில் இடம்பெற உள்ள விபரங்கள் மார்ச் 26ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் பெயர் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 என்பதாகும். இது சாதாரன மாடலில் மிக குறைந்த நீளம் பெற்ற மட்கார்டு, பின்புற இருக்கைக்கு மாற்றாக ஃபிரேம் சட்டத்தை பெற்று, புகைப்போக்கி மேல் நோக்கில் கோண வடிவில் அமைந்துள்ளது. இந்த மாடலில் ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்க வகையிலான அம்சத்தை பின்பற்றியே சமீபத்திய டீசர் வெளியாகியுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள என்ஜினை தொடர்ந்து பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. புல்லட் 350 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.
ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் பைக் சாதாரன கிளாசிக் மாடலை விட ரூபாய் 20,000 வரை விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.