ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், புதிதாக வெளியிட உள்ள 2019 ஹோண்டா சிவிக் காரின் மைலேஜ், நுட்பம், என்ஜின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா சிவிக் கார் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம்.
ஹோண்டா சிவிக் கார்
இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள சிவிக் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என இரு தேர்விலும் கிடைக்க உள்ளது.
எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்ட புதிய சிவிக் காரில் மிக ஸ்டைலிஷான தோற்ற பொலிவுடன், 17 அங்குல அலாய் வீல் பெற்று வெள்ளை, சிவப்பு, சில்வர், ஸ்டீல் மற்றும் பிரவுன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு பெற்றதாக வரவுள்ளது.
2019 ஹோண்டா சிவிக் காரின் நீளம் 4,656 மிமீ , 1,799 மிமீ அகலம், 1,433 மிமீ உயரமும் கொண்டதாக விளங்குகின்றது. இந்த காரின் சிறப்பான 2,700 மிமீ வீல்பேஸ் பெற்றிருப்பதால் உட்புறத்தில் மிகவும் தாராளமான இடவசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலனுடன், 430 லிட்டர் கொள்ளளவு பூட் ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த கார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் விளங்குகின்றது.
1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 141 hp பவர் மற்றும் 174 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருக்கும் என கூறப்படுகின்றது. சிவிக் காரின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமசாக 120 hp பவர் மற்றும் 300 Nm டார்க் திறனையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருக்கிறது.
ஹோண்டா சிவிக் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26.8 கிமீ மைலேஜ் வழங்கவல்லதாகவும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜ் தரவல்லதாகும்.
நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், இபிடி, லேன் கிப்பிங் அசிஸ்ட், லேன் வாட்சிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற பாதுகாப்பு வசதியை பெற்றதாக வரக்கூடும்.
2019 ஹோண்டா சிவிக் காரின் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம்.