இந்திய சந்தையில் புதிய 2019 ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ காரின் தொடக்க விலை ரூ.11.16 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்கோடா மோட்டார்ஸ்போர்ட் ஹெரிடேஜ் மற்றும் ரேலி மான்டோ கார்லோ நினைவாக தோற்ற மாற்றம் மற்றும் இன்டிரியரில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
முந்தைய மாடலை விட கூடுதலான மாற்றங்களை பெற்ற புதிய பதிப்பில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கின்றது. இதன் பெட்ரோல் என்ஜின் 105 bhp பவர் மற்றும் 153Nm டார்க் வழங்குவதுடன் இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.41 கிமீ (மேனுவல்) மற்றும் 14.84 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும். 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 110 bhp மற்றும் 250Nm டார்க் வழங்குவதுடன், இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.72 கிமீ (மேனுவல்) மற்றும் 21.13 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.
ஸ்கோடா நிறுவனத்தின் பராம்பரிய கருப்பு நிற கிரிலை பெற்று புராஜெக்டர் முகப்பு விளக்குடன், எல்இடி ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்துடன் மிக நேர்த்தியான அமைப்பினை கொண்டதாக வந்துள்ளது. மான்டே கார்லோ பதிப்பில் 16 அங்குல அலாய் வீல் பெற்று பாலீஷ் செய்யப்பட்டு கருப்பு நிற போல்டுகளை கொண்டுள்ளது. கருப்பு நிற ரூஃப் ரெயில் பெற்றதாக வந்துள்ளது.
மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன், கருப்பு லெதர் பெற்ற கியர் நாப் உடன் சிவப்பு நிற தையலை பெற்றுள்ளது. கருமை நிற பூச்சினை பெற்று டேஸ்போர்டில், ஸ்டீல் பெடலை பெற்றதாக வந்துள்ளது.
டுயல் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியுடன் மிக நேர்த்தியான 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை பெற்றுள்ளது.
ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ விலை பட்டியல்
1.6 MPI Petrol ரூ. 11,15,599 (மேனுவல் கியர்பாக்ஸ்)
1.6 MPI Petrol – ரூ. 12,35,599 (ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்)
1.5 TDI CR Diesel ரூ. 12,99,599 (மேனுவல் கியர்பாக்ஸ்)
1.5 TDI CR Diesel ரூ. 14,25,599 (ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்)
( விற்பனையக விலை இந்தியா )