4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனைக்கு பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நடைபெறும் முன்பதிவின் மூலம் 4000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி300 காரில் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது.
110hp பவர் மற்றும் 200NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 117hp பவர் மற்றும் 300NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். வரும் காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது.
எக்ஸ்யூவி300 பெட்ரோல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ தரவல்லதாகும். எக்ஸ்யூவி300 டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ தரவல்லதாகும்.
5 இருக்கை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டாப் W8 வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும். இந்த எஸ்யூவி W2, W4, W6 மற்றும் W8 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கும்
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கலாம். இந்த எஸ்யூவி காருக்கு 60,000 அதிகமான விசாரிப்புகளுடன் விற்பனைக்கு முன்பாக 4,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.