இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா WR-V கார்களில் சிறப்பு எக்ஸ்குளுசீவ் எடினை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களினை கவரும் வகையில் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்புகளில் மட்டும் கூடுதலான மாற்றங்களை பெற்று வந்துள்ளது. என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
ஹோண்டா ஜாஸ்
ஜாஸ் காரின் டாப் வேரியன்ட் மாடலான VX சிவிடி காரின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த எடிசனில் எல்இடி நிறுத்த விளக்குடன் கூடிய கருப்பு நிறத்திலான ஸ்பாய்லர், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய டோர் சில் கார்டுகள், கருமை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ஜாஸ் VX சிவிடி காரில் 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 9.23 லட்சம் விற்பனையக விலை ஆகும்.
ஹோண்டா அமேஸ்
அமேஸ் காரில் வந்துள்ள பிரத்தியேக ஸ்பெஷல் பதிப்பில் VX MT வேரியன்டை பின்னணியாக கொண்டு 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது.
இரட்டை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள், புதிய இருக்கை உறைகள், ஒளி உமிழ் பின்னணி கொண்ட டோர் சில் கார்டுகள், இயலபாக நகரத்தும் வகையிலான முன்புற ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அமேஸ் காரின் சிறப்பு பதிப்பு விலை ரூ. 7.87-ரூ. 8.97 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.
ஹோண்டா WR-V
WR-V மாடலில் வந்துள்ள ஸ்பெஷல் பதிப்பில் VX MT வேரியன்டை பின்னணியாக கொண்டு 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது.
எல்இடி நிறுத்த விளக்குடன் கூடிய கருப்பு நிறத்திலான ஸ்பாய்லர், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய டோர் சில் கார்டுகள், கருமை நிறத்தை பெற்ற அலாய் வீல்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா WR-V கார் விலை ரூ. 9.35-ரூ.10.48 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.