இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், தனது ஸ்கூட்டர் மாடல்களில் யூ.பி.எஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் , பராமரிப்பில்லாத பேட்டரியை யமஹா ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.
வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய இரு சக்கர வாகன பாதுகாப்பு விதிமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அனைத்து 125சிசி க்கு கீழே உள்ள டூ வீலர்களில் சி.பி.எஸ் பிரேக் மற்றும் ஏ.பி.எஸ் பிரேக் ஆப்ஷன் 125சிசி அதற்கு மேற்பட்ட திறன் பெற்ற டூ வீலர்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யமஹா நிறுவனம் சமீபத்தில் R15 V3, FZ FI, FZS FI, FZ 25 மற்றும் ஃபேஸர் 25 பைக்குகளில் ஏ.பி.எஸ் பிரேக் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, தற்சமயம் விற்பனையில் உள்ள ஃபேசினோ, சிக்னஸ் ஆல்பா, சிக்னஸ் ரே Z, சிக்னஸ் ரே ZR , மற்றும் சிக்னஸ் ரே ZR ஸ்டீரிட் ரேலி ஆகிய 5 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. யமஹா ஃபேசினோ ஸ்கூட்டரில் புதிதாக சீசன் க்ரீன் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலே பெயர் குறிக்கப்பட்டுள்ள 5 ஸ்கூட்டர் மாடல்களிலும் பொதுவாக 113 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 7.2 PS பவர் உடன் 7500 RPM மற்றும் 8.1 Nm உடன் 5000 RPM வழங்குகின்றது. சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த யூபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் விலை ரூ.400 முதல் ரூ.600 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
யமஹா ஸ்கூட்டர் விலை பட்டியல்
யமஹா ஃபேசினோ – ரூ. 56,791
யமஹா சிக்னஸ் ஆல்பா டிஸ்க் ரூ. 57,392
யமஹா சிக்னஸ் ஆல்பா டிரம் ரூ. 53,932
யமஹா சிக்னஸ் ரே Z ரூ. 52,519
யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் ரூ. 57,800
யமஹா சிக்னஸ் ரே ZR டிரம் ரூ. 55,153
யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்டீரிட் ரேலி ரூ. 59,800
(விற்பனையக விலை தமிழ்நாடு )
வருகின்ற மார்ச் மாதம் 15ந் தேதி யமஹா நிறுவனம் இந்தியாவில் ஆர்15 பைக் மாடலை பின்பற்றிய நேக்டு யமஹா MT-15 பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது.