கடந்த ஜனவரி 2019 மாதந்திர விற்பனையில், ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆகும். இது முந்தைய ஐனவரி 2018 மாதந்திர விற்பனையை விட 7 சதவீதம் குறைந்தது.
ராயல் என்ஃபீல்ட் விற்பனை நிலவரம்
நடுத்தர மோட்டார்சைக்கிள் விற்பனையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்திருந்த நிலையில், தற்போது மெல்ல தனது இலக்கை நோக்கி திரும்பி வருகின்றது.
என்ஃபீல்டு நிறுவனம், ஜனவரி 2019-ல் விற்பனை எண்ணிக்கை 70,872 ஆக பதிவு செய்திருந்த நிலையில், முந்தைய ஜனவரி 2018-யை விட 7 சதவீதம் குறைந்துள்ளது. முன்பாக விற்பனை எண்ணிக்கை 77,878 ஆக இருந்தது.
ஏற்றுமதி சந்தையில் இந்நிறுவனம் 9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக ஜனவரி 2019-ல் 1,829 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. முந்தைய வருடம் இதே மாதத்தில் விற்பனை எண்ணிக்கை 1,673 ஆக இருந்தது.
கடந்த ஏப்ரல் 2018- ஜனவரி 2019 வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக என்ஃபீல்ட் நிறுவனம், 702,637 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 2017- ஜனவரி 2018 வரையிலான காலத்தில் 671,328 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது.