ரூபாய் 53.77 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் லேண்ட் மார்க் எடிசன் மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அடிப்படையில் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று நிறங்களில் கிடைக்கின்றது.
லேண்ட் மார்க் எடிசன்
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற SE மற்றும் HSE என இரண்டு வேரியன்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டுள்ள லேண்ட் மார்க் எடிசன் மாடலில் நார்விக் பிளாக், யூலாங் ஒயிட், கோரிஸ் கிரே ஆகிய மூன்று நிறங்களை பெற்றதாக இருக்கும்.
இந்த மாடலில் முன்புற பம்பர், கிரில் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு, மேற்கூறை கர்பதியான் கிரே நிறத்தில் அமைந்திருப்பதுடன், 18 அங்குல கிரே நிறத்திலான அலாய் வீல் போன்றவை தோற்ற அமைப்பில் பெற்றுள்ளது. இன்டிரியரில் லேண்ட்மார்க் எடிசனில் எபோனி லெதர் இருக்ககைகள், ஹெட்லைனர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 180 ஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் 0 முதல் 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடலின் அதிகபட்சமாக மணிக்கு 188 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட் மார்க் எடிசன் விலை ரூ. 53.77 லட்சம் ஆகும். இந்த எஸ்யூவி இந்தியாவில் ரூ.44.68 லட்சம் தொடக்க விலையில் கிடைக்கிறது