மாடர்ன் பவர் க்ரூஸர் என அழைக்கப்படுகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், டாமினார் 400 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல் கூடுதல் வசதிகளுடன் வரவுள்ளது. டாமினார் 400 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் டாமினார் 400
கடந்த 2016 ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான டாமினார் 400 அறிமுக காலத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தாலும், அதிகப்படியான என்ஜின் அதிர்வுகள் மற்றும் சில குறைபாடுகளின் காரணமாக விற்பனையில் பின்தங்கியது.
விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் பல்வேறு அம்சங்கள் புதுப்பிக்கப்பட்ட டாமினார் 400 பைக்கில் கூடுதல் வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.
டோமினார் 400 பைக்கில் இடம்பெற்றுள்ள 373 சிசி என்ஜின் சில மாற்றங்களை பெற்றிருக்கும். குறிப்பாக மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகப்படியான அதிர்வுகள் குறைக்கப்பட்டு சீரான டார்க் அனுபவத்தை வழங்கும் என்பதனால் என்ஜின் மாற்றம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் 34 பிஎச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க் ஆகியவற்றில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
image source – abey Jose YouTube
குறிப்பாக இந்த பைக்கில் ஒரு பிரிவு புகைப்போக்கி அம்சத்தை நீக்கிவிட்டு இரட்டை பிரிவு புகைப்போக்கி குழல் வழங்கப்பட்டிருக்கும்.தற்போது இடம்பெற்றுள்ள முன்புற டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுக்கு மாற்றாக அப்-சைடு டவுன் ஃபோர்கு பெற்றிருக்கும்.
தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ டீலர்கள் வாயிலாக 2019 டாமினார் 400 பைக்கிற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
புதிய டாமினார் 400 ஜனவரி மாத இறுதி வாரத்தில் வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள டாமினாரின் விலை ரூ.1.63 லட்சமாக உள்ளது. கூடுதல் வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் பெற்றுள்ள காரணத்தால் ரூ.14,000 வரை அதிகரிக்கப்பட்டு ரூ.1.77 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கலாம்.