இலகுரக வர்த்தக வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா ஜீடு மினி டிரக் மற்றும் மினி வேன் விற்பனையில் முதல் ஒரு லட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. 2015 முதல் மஹிந்திரா ஜீடு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மஹிந்திரா ஜீடு வரிசையில் மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் 1 டன் எடை தாங்கும் திறன் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. முதன்முறையாக ஜீடு லோடு 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
33.4 கிமீ மைலேஜ் தரவல்ல ஜீடு மாடலில் S, L மற்றும் X, ஜீடு மூன்று சக்கர மைக்ரோ டிரக் மற்றும் மினி டிரக் ஆகியவற்றில் கிடைக்கின்றது. டீசல் என்ஜின் தேர்வுடன் கூடுதலாக சிஎன்ஜி வெர்ஷனில் கிடைக்கின்றது.
ஒரு லட்சம் ஜீடு விற்பனையை முன்னிட்டு இந்த டிரக்கின் பிராண்டு அம்பாசிடராக விளங்கும் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் அவர்களை சந்திக்க 12,000 மஹிந்திரா ஜீடூ உரிமையாளர்கள் வாய்ப்பை பெற உள்ளனர்.