பிரசத்தி பெற்ற ஜெர்மன் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம், ரைடர் இல்லாமல் செயல்படும் தானியங்கி பைக் மாடலை CES 2019 அரங்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. செல்ஃப் ரைடிங் மோட்டார்சைக்கிளை பிஎம்டபிள்யூ R 1200 GS மாடலை கொண்டு வடிவமைத்துள்ளது.
ரைடர் இல்லா பிஎம்டபிள்யூ பைக்
பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செல்ஃப் ரைடிங் மோட்டார்சைக்கிள் மாடல் தானியங்கி முறையில் பைக்கை இயக்குவது நோக்கமல்ல மாறாக அனுபவமிக்க ரைடருக்கு பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை மேம்படுத்தவும், ரைடிங் அனுபவத்தை மேம்படுத்த மற்றும் புதிய ரைடர்களுக்கு மோட்டார்சைக்கிளின் அனுபவத்தை விரைவாக கற்க உதவுவதே என குறிப்பிட்டள்ளது.
புதிய நுட்பத்தினால் வாகனத்தின் நிலைப்பு தன்மை முழுமையாக பரமாரிக்கப்படுவதுடன், எதிர் வரும் வாகனங்களை கணித்து பைக் ரைடர்களுக்கு சிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்த பிரேக்கிங் பாயின்ட், வளைவுகளில் மிக சிறப்பாக திரும்பவும் உதவுகிறது.
ரைடர்கள் இல்லாமல் பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் இயங்கும் வகையில் சிஇஎஸ் 2019 அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் முதன்மையான காரணம் என்னவென்றால் சிறிய கவனக்குறைவை தடுப்பதே ஆகும்.