சில மாதங்களுக்கு முன் ராயல் என்ஃபீல்ட் ஸ்கிராம்பளர் தொடர்பான படங்கள் மற்றும் சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில் , தற்போது ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் 350 , ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் 500 என்ற பெயருடன் பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
புல்லட் ட்ரையல்ஸ் 350
புல்லட் மாடலை பின்பற்றி பல்வேறு மாறுதல்களை பெற்ற பெயர் தெரியாத இருந்த நிலையில் தற்போது இந்த மோட்டார்சைக்கிள் பெயர் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 என தெரிந்துள்ளது. இது சாதாரன மாடலில் மிக குறைந்த நீளம் பெற்ற மட்கார்டு, பின்புற இருக்கைக்கு மாற்றாக ஃபிரேம் சட்டத்தை பெற்று, புகைப்போக்கி மேல் நோக்கில் கோண வடிவில் அமைந்துள்ளது. இந்த மாடலில் ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்க வல்ல டயர்களை பெற்றுள்ளது.
மேலும் டெயில் விளக்கு, இன்டிகேட்டர், ஒற்றை இருக்கை, டையல் சேனல் ஏபிஎஸ் போன்றவற்றுடன் பெட்ரோல் டேங்கில் இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள பேட்ஜ் லோகோ பெற்றிருக்கின்றது.
இந்த பைக்கில் புல்லட் 350 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.
புல்லட் ட்ரையல்ஸ் 350 வருகை
இந்த புதிய புல்லட் டரையல்ஸ் மாடல் பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் சாதாரன கிளாசிக் மாடலை விட ரூ.30000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Image source : gaadiwaadi