பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இங்கிலாந்தில் அமைந்திருந்த ரெட்டிச் ஆலையின் நினைவாக வெளியிடப்பட்ட ரெட்டிச் எடிஷன் மாடல்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் 19.8hp பவரை 5,250rpm சுழற்சியில் மற்றும் 28Nm டார்கினை 4,000rpm சுழற்சியில் வெளிப்படுத்தும் 346சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக டூயல் சேனல் ஏபிஎஸ் கிளாசிக் 350 சிக்னல்ஸ், கன்மெட்டல் கிரே ஆகியவற்றில் கிடைத்து வருகின்றது. தற்போது கிளாசிக் ரெட்டிச் எடிஷன் மாடலில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் 35mm டெலஸ்கோபிக் பிராண்ட் போரக்ஸ் மற்றும் கியாஸ் சார்ஜ்டு டுவின் ஷாக் அப்சார்பர்கள் மோட்டார் சைக்கிளின் ரியர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பிரேக்கை பொறுத்தவரை, முன்புற, பின்புற டயர்களில் சிங்கிள் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.
சாதாரன ரெட்டிச் எடிஷன் மாடலை விட டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் சுமார் ரூ.6000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் எடிஷன் விலை ரூ. 1.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சாதாரன மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படவில்லை. ரெட்டிச் எடிஷன் மாடல் பச்சை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. தற்சமயம் டூயல் சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு நடந்து வருவதனால், ஜனவரி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.
சமீபத்தில் ஜாவா பைக் நிறுவனம் டூயல் சேனல் ஏபிஎஸ், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரண்டிலும் ஜாவா , ஜாவா 42 மாடல்களை வெளியிட்டு என்ஃபீல்ட் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு எதிராக நிலை நிறுத்தியுள்ளது.