மாருதி ஸ்விஃப்ட் கார் HEARTECT பிளாட்பாரத்தில் மிக சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்டு விளங்குவதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெற்றிருக்கின்றது. சுசுகி ஸ்விஃப்ட் காரில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 20,000 க்கு அதிகமான எண்ணிக்கையில் ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக அமேஸ் மற்றும் சான்ட்ரோ விளங்கியது.