இந்திய இரு சக்கர வாகனங்களின் சிறந்த டூவீலருக்கான Indian Motorcycle of the Year (IMOTY ) 2019 விருதினை, பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் வென்றுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த பைக்கிற்கான தேர்வுமுறையில் பைக் விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு, நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் 12 நபர்களால் IMOTY தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த பைக் தேர்வு முறையில் இறுதி சுற்றில் பங்கேற்ற 12 பைக்குகளின் விபரம் பின்வருமாறு ;- பிஎம்டபிள்யூ G 310 R, பிஎம்டபிள்யூ G 310 GS, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R, ஹோண்டா CBR650F, ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650, சுசூகி GSX-S750, சுசூகி V-Strom 650 XT ABS, SWM சூப்பர்டூயல் T, ட்ரையம்ப் டைகர் 800, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, டிவிஎஸ் அப்பாச்சி RR 310 மற்றும் யமஹா YZF-R15 V 3.0.
இந்த பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 முதலிடத்தை பெற்ற நிலையில் , இதனை தொடர்ந்து யமஹா YZF-R15 இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி RR310, இறுதியாக நான்காவது இடத்திலும் அப்பாச்சி RTR 160 4V பைக் தேர்வு பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த மோட்டார்சைக்கிள் விருதினை ஜேகே டயர் ஸ்பானசர் செய்துள்ளது.