இந்தியாவின் முன்னணி பயணிகள் கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி தொடர்ந்து இந்தியாவின் 54 சதவீத பங்களிப்பை பெற்று விளங்குகின்றது. 2018 நவம்பர் மாத விற்பனையில் இந்தியாவின் முதன்மையான காராக மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் இடம்பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் மாத கார் விற்பனையில் தொடர்ந்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மாருதி ஸ்விஃப்ட் , மாருதி டிசையர், பிரெஸ்ஸா, ஆல்டோ மற்றும் பலேனோ போன்றவை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் மொத்தமாக 143,890 எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து இந்தியாவின் 54 சதவீத பங்களிப்பை பெற்று விளங்கும் மாருதியை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா 16.4 சதவீத பங்களிப்புடன் 43,709 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 18,226 வாகனங்களை விற்பனை செய்து 6.8 சதவீத பங்களிப்பும், அதனை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் 16,191 வாகனங்களை விற்பனை செய்து 6 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.
இனி தொடர்ந்து அட்டவைனையில் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 கார்களை அறிந்து கொள்ளலாம்.
விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி சந்தையில் தொடர்ந்து சிறப்பான ஆதரவை பெற்று 14,378 வாகனங்களை விற்பனை செய்து 6 வது இடத்தை பிடித்து முதன்மையான யட்டிலிட்டி ரக வாகனமாக விளங்குகின்ற நிலையில், இதற்கு போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா 9677 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து பல வருடங்களாக முன்னிலை வகித்து வந்த மாருதி ஆல்டோ கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதற்கு ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் க்விட் போன்ற கார்கள் முக்கிய பங்காற்றி வருகின்றது.
விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – நவம்பர் 2018
வ. எண் | தயாரிப்பாளர் | நவம்பர் 2018 |
1. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 22,191 |
2. | மாருதி சுசூகி டிசையர் | 21,037 |
3. | மாருதி சுசூகி பலேனோ | 18,649 |
4. | மாருதி சுசூகி ஆல்டோ | 18,643 |
5. | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா | 14,378 |
6. | மாருதி வேகன் ஆர் | 11,311 |
7. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 10,555 |
8. | ஹூண்டாய் க்ரெட்டா | 9,677 |
9. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 9,252 |
10. | ஹூண்டாய் சான்ட்ரோ (Automobile Tamilan) | 9,009 |