கிளாசிக் ரக வடிவமைப்பினை பெற்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான லம்பிரெட்டா ஸ்கூட்டர் மீண்டும் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக களமிறங்குவதனை உறுதி செய்துள்ளது. #Lambretta
1947 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்தாலி மிலன் நகரில் தொடங்கப்பட்ட லம்பிரெட்டா ஸ்கூட்டர் நிறவனம் தொடர்ந்து பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் முதன்முறையாக 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் அரசு சார்பில் தொடங்கி நிறவனத்தால் லம்பிரெட்டா ஸ்கூட்டர் உற்பத்தி 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1997 வரை ஸ்கூட்டர் உற்பத்தி மேற்கொண்ட இந்நிறுவனம் அதன் பிறகு ஸ்கூட்டர் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு மூன்று சக்கர வாகனங்களான விக்ரம் மற்றும் லம்ப்ரோ என்ற பெயரில் உற்பத்தி செய்த இந்நிறுவனம் மீண்டும் ஸ்கூட்டர் விற்பனையை 2020 முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
லம்பிரெட்டா நிறுவனம், தற்போது 80 க்கு மேற்பட்ட நாடுகளில் தனது மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் மீண்டும் இந்திய சந்தையில் லோகி ஆட்டோ மற்றும் பேர்ட் க்ரூப் வாயிலாக மீண்டும் இந்திய சந்தையில் பிப்ரவரி 6-9 வரை நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோட்டோடைப் மாடலை இந்தியாவில் வெளியிட உள்ளது.
புதிய லம்பிரெட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான நுட்ப விபரங்களை வெளியிடப்படவில்லை. இந்த ஸ்கூட்டர் தயாரிப்பு பணியை இந்நிறுவனத்தின் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவில் மும்பை அருகே இந்நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைய வாய்ப்புள்ளது.