நிசான் இந்தியா நிறுவனம், வருகின்ற ஜனவரி 1, 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நிசான் மற்றும் டட்சன் கார் மாடல்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மாறிவரும் அன்னிய செலாவனி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தின் சன்னி, மைக்ரா மற்றும் டெரானோ உள்ளிட்ட அனைத்து மாடல்களின் விலையும், டட்சன் நிறுவன கோ, கோ பிளஸ் மாடல் விலையும் 4 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றது.
விரைவில் இந்நிறுவனத்தின் புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியாவதை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் டிஜிட்டல் ஹப் முறையில் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.