இந்தியா யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை பெற்ற 2019 யமஹா சல்யூட்டோ RX மற்றும் யமஹா சல்யூட்டோ 125 பைக் ஆகிய இரண்டிலும்
Unified Braking System (UBS) பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
யூபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்றால் என்ன ?
வருகின்ற, ஏப்ரல் 1, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கு குறைவான பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் CBS அல்லது UBS கட்டாயம் என அறிவிக்கப்பட்டள்ளது.
யூபிஎஸ் என்றால் யூனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் என்றால் முன்புற பிரேக்கினை அப்ளை செய்யும்போது பின்புற பிரேக்கும் தொடர்ந்து இயங்கி பைக்கின் நிறுத்தும் திறன் அதிகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது ஹோண்டா நிறுவனத்தின் காம்பி பிரேக் போன்றதாகும்.
99 கிலோ எடை கொண்ட சல்யூட்டோ RX பூளூ கோர் என்ஜின் நுட்பத்தை பெற்ற 110சிசி என்ஜின் அதிகபட்சமாக 7.48 PS பவர் மற்றும் 8.5 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
114 கிலோ எடை கொண்ட சல்யூட்டோ 125 பூளூ கோர் என்ஜின் நுட்பத்தை பெற்ற 125சிசி என்ஜின் அதிகபட்சமாக 8.3 PS பவர் மற்றும் 10.1 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2019 யமஹா சல்யூட்டோ விலை பட்டியல்
சல்யூட்டோ 125 – ரூ. 60,446 (டிரம்)
சல்யூட்டோ 125 – ரூ. 62,146 (டிஸ்க்)
சல்யூட்டோ RX – ரூ. 51,789
(தமிழ்நாடு விற்பனையக விலை)