ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமோபைல் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் 2019 ஹோண்டா CBR150R மோட்டார் சைக்கிள்களை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிள் ஹோண்டா குடும்பத்தின் மிகச்சிறிய மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்களுடன், மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2019 ஹோண்டா CBR150R மோட்டார் சைக்கிள்கள், மேட் பிளாக், விக்டரி பிளாக் ரெட், ஹோண்டா ரேசிங் ரெட் மற்றும் மோட்டோஜிபி எடிசன் என நான்கு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் உயரமான விண்ட்ஷீல்ட், டூயல் LED ஹெட்லைட்கள் மற்றும் LED இன்டிக்கேட்டர்கள் மற்றும் பிளாக் அவுட் எக்ஸாஸ்ட்களை கொண்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிளின் பின்புற சீட், இதற்கு முந்திய தலைமுறையை விட உயரமாக இருந்தது. மோட்டோஜிபி எடிசன் ஆரஞ்சு கலரிலும், மற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களும் பிளாக் அலாய் வீல்களுடன் கிடைகிறது.
இந்த மோட்டார் சைக்கிள், தற்போது ABS-களுடன் வெளி வருகிறது. மேலும் இதில் பெடல் டிஸ்க் பிரேக் மற்றும் ஐந்து லெவல் செட்டிங் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 2019 ஹோண்டா CBR150R மோட்டார் சைக்கிள்களில் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல்களுடன், ரியர் பிரேக் லைட்கள் அவசர காலத்தில் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்கள் தற்போது பிளாக்லைட் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் இன்ஜின் 149cc லிக்யுட் கூல்டு இன்ஜின்களாகும். மேலும் இந்த இன்ஜின்கள் 16.8 bhp ஆற்றலுடன், 14.4 Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய 2019 ஹோண்டா CBR150R இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்பு விலை மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இந்த 2019 ஹோண்டா CBR150R மோட்டார் சைக்கிள்களின் விலை 1.40 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோ ரூம் விலை). மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் வரும் 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஹோண்டா CBR150R இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் யமஹா R15 V3 மோட்டார் சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.