கடந்த 1995ம் ஆண்டு போர்டு நிறுவனம் முதல் முறையாக இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது முதல் இந்த நிறுவனம், வாகங்களை இறக்குமதி செய்வதுடன் இன்ஜின்களை இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வருகிறது.
இந்நிலையில், மகேந்திரா நிறுவனத்தின் வாகன துறை பல ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருவதுடன், பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்தியாவில் வர்த்தக ரீதியான எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஒரே நிறுவனமாகவும் மகேந்திரா நிறுவனம் இருந்து வருகிறது.
மகேந்திரா நிறுவனம் குறைந்த டிஸ்பிளேஸ்மென்ட் பெட்ரோல் இன்ஜின்களை போர்டு நிறுவனதிற்கு சப்ளை செய்ய உள்ளது. இந்த சப்ளையை வரும் 2020ம் ஆண்டு முதல் தொடங்க உள்ளது.
இந்த BS-VI இன்ஜின்கள் மூலம் போர்டு நிறு வனம் தங்கள் பெட்ரோல் வகை கார்களை மேலும் வலுவானதாக மாற்றி கொள்ள உதவும். இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து டெலிமேட்டிக் கண்ட்ரோல் யூனிட் ஒன்றை மேம்படுத்தியுள்ளது. இவை, போர்டு மற்றும் மகேந்திரா இரண்டு நிறுவன வாகனங்களிலும் பொருத்தப்பட உள்ளது.
இரு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது, இரு நிறுவனங்களின் தனித்துவ தன்மை மற்றும் திறனை மேலும் அதிகரிக்கும். மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் தயாரிப்புகளை அதிகரித்து, ஒன்றாக எலெக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்களை தயாரிக்க உதவும்.