டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், 2018 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் விலை 53, 027 ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்). புதிய வீகோ ஸ்கூட்டர்கள், புதிய கிராபிக்ஸ் மற்றும் சில பிரீமியம் வசதிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஜூபிடர் கிராண்ட் ஸ்கூட்டர்களை இந்தியா மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.
டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள், இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 5G, யமஹா அல்பா மற்றும் ஹீரோ மாஸ்ட்ரோ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். இதுமட்டுமின்றி பாடி பேலன்சிங் டெக்னாலஜி’யுடன் வெளி வந்துள்ள முதல் ஸ்கூட்டர் வீகோ என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளிவந்துள்ள டிவிஎஸ் வீகோ மோட்டார் சைக்கிள்கள், சிங்கிள் மற்றும் டூயல் டோன் கலரில் வெளியாகியுள்ளது. சிங்கிள் கலர் வகைகள் மிட்நைட் பிளாக், டீப் ஸ்கை ப்ளூ, மெர்குரி கிரே, மெட்டாலிக் ஆரஞ்ச், வோல்கனோ ரெட் மற்றும் ஸ்போர்டி ஓயிட், ப்ளூ பிளாக் மற்றும் ரெட் பிளாக் ஆகிய டூயல் டோன் கலரில் கிடைக்கிறது.
இருந்தபோதும், புதிய ஸ்கூட்டர்கள் ரெட், ப்ளூ, கிரே மற்றும் பிளாக் என நான்கு கலர் ஆப்சன்களுடன் முழுவதும் புதிய கிராபிக்ஸ்களுடன் வெளியாகியுள்ளது. புதிய வசதிகளாக, இதில் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான சீட், வீல் ரிம் ஸ்டிக்கர்கள், பாஸ்-பை-சுவிட்ச், 20-லிட்டர் யுட்டிலிட்டி பாக்ஸ் மற்றும் பராமரிப்பு தேவைப்படாத பேட்டரிகளை கொண்டுள்ளது. டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள், முழுவதும் மெட்டாலிக் பாடி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், வெளிப்புறமாக பெட்ரோல் லிட்களையும் கொண்டுள்ளது. LED டைல் லேம்ப், டெலஸ்கோபிக் பிராண்ட் சஸ்பென்சன் மற்றும் ரியர் மோனோ ஷாக் போன்றவை வழக்கமாகவே இடம் பெற்றுள்ளது.
டைமன்சன்களை பொறுத்தவரை, 2018 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள், 1834mm நீளமும், 640mm அகலமும், 1115mm உயரமும் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரின் வீல்பேஸ்கள் 1275mm அளவு கொண்டதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர்கள் 110cc ஏர்-கூல்டு இன்ஜினை கொண்டிருக்கும். மேலும் இது 7.99bhp ஆற்றலுடன் 7500rpm-லும், பீக் டார்க்கான 8.4Nm-ல் 5500rpm-ஆக இருக்கும். இந்த இன்ஜின் தொடர்சியாக மாறுபடும் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.