இந்த மாத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்களை வெளியிட்டது டாட்சன் இந்தியா நிறுவனம். இந்த கார்களில் புதிய காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட ஸ்டைல்களும் இடம் பெற்றுள்ளது. டாட்சன் நிறுவனம் புதிய கோ வகை கார்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. காரின் உட்பகுதி மூடப்பட்ட நிலையிலேயே அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களுக்கான பிரி புக்கிங்கள், நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த கார்களை வாங்க விரும்புபவர்கள், டாட்சன் நிறுவன டீலர்களிடம் 11,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரின் டெலிவரிகள் வரும் 9-ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.
டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் குறித்து நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் கமர்சியல் பிரிவு இயக்குனர் ஹர்தீப் சிங் பிரர் தெரிவிக்கையில், இளைய தலைமுறையினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த் கார்களின் கவர்ந்திழுக்கும் டிசைன், ஆற்றல் மற்றும் செயல்திறன் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் கார்களின் காஸ்மெடிக் அப்கிரேடுகளாக, புதிய ஆங்குலர் பிராண்ட், மறுசீரமைக்கப்பட்ட ஹெட்லேம்கள் மற்றும் ஷார்ப் ஸ்டைல் பம்பர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் செங்குத்தான LED டே டைம் ரன்னிங் லைட்கள் பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 14 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது, இது இந்தோனேசியாவில் வெளியான மாடல்கள் போன்று இருக்கும். மற்றொரு வசதியாக ரியர் வைப்பர் பொருத்தப்பட்டுள்ளது.
2018 டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் கார்களின் கேபினை பொறுத்தவரை, மாற்றியமைக்கப்பட்ட டஷ் போர்டு, லாக் செய்யும் கிளவ் பாக்ஸ் மற்றும் புதிய சென்டர் கன்சோல் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. கோ டுவின்களில் ஆப்பில் பிளே உடன் கூடிய டச்ஸ்கிரின் இன்போடேயன்ம்ன்ட் யூனிட் மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ கனேக்டிவிட்டி சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது. மற்ற அப்கிரேடுகளாக, டிரைவர் சைடு ஏர்பேக், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் மற்றும் பயணம் செய்பவர்களுக்கான சீட் பெல்ட் ரீமைண்டர் சிஸ்டம், மேலும் வரும் 2019ம் ஆண்டில் அமலுக்கு வர உள்ள பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ற வகையில் இந்த கார்கள் இருக்கும்.
இந்த கார்களின் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இவை வழக்கமான 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், இவை 5000rpm ல் 67 bhp ஆற்றல் மற்றும் 104 Nm டார்க்யூ கொண்டதாகவும் உச்சபட்ட டார்க்யூ-வாக 4000rpm கொண்டிருக்கும். இந்த மோட்டார் தற்போது 5-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெடி-கோ மாடல்களில் இருந்து AMT யூனிட் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து வகைகளில் வெளியாக உள்ள டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட் கார்கள், வெல் – அம்பர் ஆரஞ்சு மற்றும் சுன்ஸ்டோன் பிரவுன் என இரண்டு புதிய கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த சிறிய கார்கள், மாருதி சுஸுகி ஆல்டோ கே 10, ரெனால்ட் குவிட் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் சாண்ட்ரோ (AH2) கார்களுக்கு போட்டியாக இருக்கும்.