இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபீலா மோட்டார்சைக்கிள் உந்துதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ்
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து படை வீரர்கள் எதிரிகளின் எல்லைப் பகுதியில் நுழைந்து போரிடும் நோக்கில், விமானங்களில் இருந்து குறைந்த எடை கொண்ட மோட்டார்சைக்கிளை பாராசூட் கொண்டு இறங்கி பயணிக்கும் வகையில் இலகு எடை கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல் RE/WD Flying Flea 125 இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்வுட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
பெகாசஸ் என்றால் பறக்கும் குதிரை என்பது பொருளாகும். சர்வதேச அளவில் 1000 மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 27.2 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 41.3 என்எம் இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் 1000 மோட்டார்சைக்கிள்கள் பெகாசஸ் எடிசனில் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் , இவற்றில் 190 மாடல்கள் இங்கிஙாந்து சந்தையிலும், இந்தியாவில் 250 மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலீவ் டிராப் கீரின் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால் இந்திய சந்தையில் ஆலிவு டிராப் க்ரீன் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பில்லை.
மேலும் ஒவ்வொரு ராயல் என்ஃபீல்ட் கிளாக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளிலும் வரிசையான எண் டேங்க் மேற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும். வருகின்ற ஜூலை முதல் விற்பனைக்கு வரக்கூடிம் என எதிர்பார்க்கப்படுகின்ற பெகாசஸ் லிமிடெட் எடிசன் இங்கிலாந்தில் (ரூ.4.55 லட்சத்தில்) விற்பனைக்கு வந்துள்ளதால் இந்தியாவில் ரூ. 2.30 லட்சத்தில் ஆன்-ரோடு விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.