இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா யாரிஸ் கார், விற்பனைக்கு வெளியிட்ட முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 1000 யாரிஸ் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா யாரிஸ்
கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் இறுதி வாரத்தில் சந்தையில் விற்பனைக்கு ரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட யாரிஸ் செடான் கார் நாடு முழுவதும் இன்று முதல் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.
இனி., யாரிஸ் பற்றி அறிந்து கொள்ளலாம்
கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள யாரிஸ் செடான் மிக நேர்த்தியான தோற்ற அமைப்புடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. இந்த காரில் முதற்கட்டமாக 108 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தகப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
காம்பேக்ட் ரக செக்மெட்டில் பல்வேறு வசதிகளை முதன்முறையாக பெற உள்ள யாரிஸ் செடான் காரில் குறிப்பாக 7 காற்றுப்பைகள் , 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், கூரையில் ஏசி வென்ட், எல்இடி விளக்கு பின்புற பயணிகளுக்கு, ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார் உட்பட ஏபிஎஸ், இபிடி, புராஜெக்டர் ஹெட்லேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.
டொயோட்டா யாரிஸ் கார் விலை பட்டியல்
Variant | MT | CVT |
---|---|---|
J | ₹ 8.75 லட்சம் | ₹ 9.95 லட்ச் |
G | ₹ 10.56 லட்சம் | ₹ 11.76 லட்சம் |
V | ₹ 11.70 லட்சம் | ₹ 12.90 லட்சம் |
VX | ₹ 12.85 லட்சம் | ₹ 14.07 லட்சம் |
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)