இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவி அடிப்படையிலான கூடுதல் இருக்கை கொண்ட வர்த்தக ரீதியான மாடலாக மஹிந்திரா டியூவி 300 பிளஸ் காரின் நுட்ப விபரம் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா டியூவி 300 பிளஸ்
சைலோ எம்பிவி கார் விரைவில் சந்தையிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அடிப்படை அம்சங்களை கொண்டதாக வரவுள்ள இந்த மாடல் ஒற்றை P4 வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
விற்பனையில் உள்ள டியூவி 300 மாடலை விட 405 மிமீ நீளம் கொண்டதாக 27 மிமீ உயரம் குறைக்கப்பட்டு 4400 மிமீ நீளம் x 1835 மிமீ அகலம் x 1812 மிமீ உயரம் கொண்டிருக்கின்றது. 120 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்திம் எம் ஹாக் பாரத் ஸ்டேஜ் 4 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 280 என்எம் இழுவைத் திறனை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
16 அங்குல ஸ்டீல் வீலை பெற்று விளங்கும் பி4 வேரியன்டில் மொத்தம் 9 இருக்கை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இறுதியாக பக்காவாட்டில் இருக்கைகள் அமைந்திருக்கின்றது. பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங், மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம், ஏசி உள்ளிட்ட அம்சங்களுடன் வரவுள்ளது. ஆனால் பாதுகாப்பு சார்ந்த அடிப்படை அம்சங்களான ஏபிஎஸ், ஏர்பேக் ஆகியவற்றை பெறவதற்கு தவறியுள்ளது.
கருப்பு, சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை பெற்றதாக வரவுள்ள TUV300 பிளஸ் விரைவில் சந்தைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா TUV 300 எஸ்யூவி விலை ரூ. 8.14 லட்சம் ஆகும்.
பட உதவி – team bhp