இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், புதிதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலைக்குகள் 7 டன் முதல் 16 டன் வரையில் மொத்தம் 14 விதமான டிரக்குகளை இடைநிலை இலகுரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் டாடா அல்டரா டிரக்குகள் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டாடா அல்டரா டிரக்குகள்
டாடா மோட்டார்சின் புதிய அல்ட்ரா ரேன்ச் வரிசை மாடல்களில் 7 டன் எடை தாங்கும் திறன் முதல் 16 டன் எடை தாங்கும் பிரிவான இடைநிலை வர்த்தக வாகனங்கள் பிரிவில் பல்வேறு விதமான பயன்பாட்டு ரீதியாக பயன்படுத்த இயலும். குறிப்பாக டூ வீலர் கேரியர், நகராட்சி வாகனமாக, சிமென்ட் மிக்ஸர், கோழிகளை எடுத்துச் செல்வதற்கு உட்பட பல்வேறு பயன்களை வழங்கும் விதமான லாரி மாடல்களாக விளங்க உள்ளது.
அல்ட்ரா டிரக் மாடல்களில் டர்போட்ரான் வரிசை டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு 3.0 லிட்டர் மற்றும் 5 லிட்டர் என இரு விதமான எஞ்சின்களில் கிடைக்க உள்ளது. இந்த எஞ்சின்கள் 125-210 ஹெச்பி வரையிலான முறையில் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். பொதுவாக இந்த டிரக்குகளில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 210 ஹெச்பி ஆற்றலை வழங்கும் மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆடடோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது.
வருடாந்திரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகனங்கள் பிரிவில் சுமார் ரூ.1500 கோடி வரையில் முதலீட்டை மேற்கொண்டு வரும் நிலையில், 2020 ஆம் ஆண்டிற்உள் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற திட்டமிட்டுள்ளது. அல்ட்ரா வரிசை டிரக்குகள் இந்திய மட்டுமல்லாமல் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இடைநிலை இலகுரக வர்த்தக வாகன பிரிவில் (ILCV – intermediate and light commercial vehicles) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 44.2 சதவிதமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.