மேக் இன் இந்தியா மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின், வோக்ஸ்வாகன் ஏமியோ காரில் வரையறுக்கப்பட்ட ஏமியோ பேஸ் எடிசன் உட்பட முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வாகன் ஏமியோ
4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு போட்டியாக விளங்குகின்ற அமியோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 74 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு 95 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. டீசல் மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல், 110 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI (Turbocharged direct injection) இன்ஜின் டார்க் 230 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG (direct-shift gearbox) ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மேலும் ஏமியோ கம்பார்ட் லைன் வேரியன்டை பின்னணியாக கொண்டு கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட்ட மாடலாக ஏமியோ பேஸ் எடிசன் வெளியாகியுள்ளது. இந்த மாடலில் 15 அங்குல அலாய் வீல், கருப்பு பூச்சினை பெற்ற ஓஆர்விஎம், க்ரூஸ் கன்ட்ரொல், பனி விளக்கு அறையில் கருப்பு நிற பூச்சை பெற்று விளங்குகின்றது.
காம்பேக்ட் ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமைந்திருக்கின்றது.
ஃபோக்ஸ்வேகன் ஏமியோ பேஸ் எடிசன் விலை ரூ.6.01 லட்சம் ஆகும்.