கூடுதல் வசதிகளை கொண்டதாக வெளியாகியுள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விலை ரூ. 4,400 முதல் அதிகபட்சமாக ரூ. 9,900 விலை உயர்த்தப்பட்டு அனைத்து வேரியன்டிலும் ரியர் பார்க்கிங் சென்சார் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் எஸ்யூவி
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் அனைத்து வேரியன்டிலும் கூடுதலான சில வசதிகளை இந்நிறுவனம் இணைத்துள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார், வேகத்தை உணர்ந்து தானாகவே கதவுகளை மூடிக்கொள்ளும் அமைப்பு, பயணிகள் இருக்கை பட்டை நினைவுப்படுத்தும் அமைப்பு ஆகியவை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியன்டிலும கிடைக்க தொடங்கியுள்ளது.
டிரென்ட், டிரென்ட் பிளஸ் மற்றும் டைட்டானியம் + ஆகிய வேரியன்ட்களில் புதியதாக வழங்கப்பட்டுள்ள 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷற் அமைப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் உயர் ரக டைட்டானியம் + வேரியன்டில் மை கீ மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 14.8 கிமீ மற்றும் டீசல் எஞ்சின் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 23 கிமீ ஆகும்.
போட்டியாளர்கள்
விற்பனையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி 300, டாடா நெக்ஸா , ஹோண்டா WR-V ஆகிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் புதிய விலை பட்டியல்
Ford Ecosport | பெட்ரோல் | டீசல் |
Ambiente | ரூ. 7,82,200 | ரூ. 8,41,700 |
Trend | ரூ. 8,56,200 | ரூ. 9,15,700 |
Trend+ | ரூ. 9,75,800 | ரூ. 955,700 |
Titanium | ரூ. 9,55,400 | ரூ. 10,14,300 |
Titanium+ MT | ரூ.10,52,300 | ரூ. 11,04,300 |
Titanium + AT | ரூ. 11,35,600 | —- |
உதவி -team bhp