இந்திய சந்தையில் எஸ்யூவி மாடல்களில் மிக அதிகப்படியாக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி 10 இலட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது. நகர்புற மக்கள் மட்டுமல்லாமல் ஊரக பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று விளங்குகின்றது.
மஹிந்திரா பொலிரோ
கடந்த ஆகஸ்ட் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மஹிந்திரா பொலிரோ தோற்ற அமைப்பில் தொடர்ந்து பெரிதான மாற்றங்களை பெறாமல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும், சந்தையில் முன்னிலை வகித்து வருகின்றது. மேலும் குறைந்தபட்ச திறன் பெற்ற mHawkD70 எஞ்சின் கொண்ட பொலிரோ பவர் பிளஸ் மாடல் ஆகஸ்ட் 2016 யில் விற்பனைக்கு வந்தது.
க்ரெட்டா , விட்டாரா பிரெஸ்ஸா போன்ற எஸ்யூவி மாடல்களின் ஸ்டைலிஷான அமைப்பு , பொலிரோவின் விற்பனை பல மாதங்களாக குறைய காரணமாக அமைந்திருந்த நிலையில், மீண்டும் மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களில் பிப்ரவரி 2018 முதல் தன்னை பொலிரோ நிலைநிறுத்திக் கொண்டது.
அறிமுகம் செய்யப்பட்ட 18 ஆண்டுகளில் 10 லட்சம் வாகனங்கள் என்ற விற்பனை இலக்கை கடந்துள்ள பொலிரோ மாடல் தொடர்ந்து இந்திய சந்தையின் எஸ்யூவி ராஜாவாக விளங்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.