அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோர்டு ஃபிகோ கார் அடிப்படையிலான க்ராஸ்ஒவர் ரக ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கார் வேரியன்ட், நுட்ப விபரங்கள் மற்றும் எதிர்பார்க்கூடிய விலை விபரத்தை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
ஃபோர்டு ஃபிரீஸ்டைல்
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபீகோ அடிப்படையிலான இந்த க்ராஸ் ஹேட்ச் மாடலில் பெட்ரோல் , டீசல் எஞ்சின் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது. ஃப்ரீஸ்டைல் காரில் 96 ஹெச்பி ஆற்றல், 120 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டிராகன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 19 கிமீ ஆகும்.
100 ஹெச்பி ஆற்றல் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றிருக்கும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.4 கிமீ ஆகும்.
ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என மொத்தம் நான்கு விதமான வேரியன்ட்களை பெற்றிருக்கும், இந்த மாடல்களில் ஏபிஎஸ், இபிடி, இரட்டை காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் பின்புற பனி விளக்கு ஆகிய அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை நிரந்தரமாக பெற்று விளங்குகின்றது.
ஃபீரிஸ்டைல் கார் மிக நேர்த்தியான தேன்கூடு கிரிலுடன், அகலமான பானெட், ஸ்கிட் பிளேட் மற்றும் கருப்பு நிற பூச்சினை கொண்ட ஹெட்லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது. 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்டு சிங்க் 3 பெற்றிருப்பதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றுடன் 6 காற்றுப்பைகள் கொண்டதாக உள்ளது. கேனயான் ரிட்ஜ், ஸ்மோக் கிரே, மோனோடஸ்ட் சில்வர், வெள்ளை கோல்டு, வெள்ளை மற்றும் கருப்பு என மொத்தம் 6 விதமான நிறங்களில் ஃப்ரீஸ்டைல் கிடைக்க உள்ளது.
ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கார் ஆரம்ப விலை ரூ. 6 லட்சத்தில் தொடங்கலாம்.