இந்தியாவின் மிக விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற பஜாஜ் CT100 பைக் மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு ரூ.30,174 ஆரம்ப விலையில் பஜாஜ் சிடி100 மொத்தம் மூன்று விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
பஜாஜ் CT100 பைக்
குறைந்த விலை மோட்டார்சைக்கிளை விற்பனை செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிடி 100 மாடலின் விலை ரூ. 1939 முதல் அதிகபட்சமாக ரூ. 6835 வரை விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. சிடி100 பைக் மாடல் சிடி100பி, கிக் ஸ்டார்ட்டர் அலாய் வீல் , மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்டர் ஆகிய மூன்று வேரியன்டில் கிடைக்கின்றது.
இவற்றில் CT100B , KS Alloy ஆகிய இரு வேரியன்ட்களில் 97.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 bhp ஆற்றல் மற்றும் 8.05 Nm டார்கினை வழங்குகின்றது. CT 100 ES Alloy வீல் பெற்ற மாடலில் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.5 bhp ஆற்றல் மற்றும் 8.24 Nm டார்கினை வழங்குகின்றது இந்த இரண்டு மாடலிலும் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த பைக்குகளில், முன்புறத்தில் 125 மிமீ ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 110மிமீ பிரேக்கினை டயரில் பெற்றுள்ளது,. பின்புறத்தில் 100மிமீ பயணிக்கும் திறன் பெற்ற SNS ட்வின் சாக் அப்சார்பருடன் , டயரில் 110மிமீ பிரேக்கினை கொண்டதாக விளங்குகின்றது.
டிவிஎஸ் XL100, டிவிஎஸ் ஸ்போர்ட் , ஹீரோ எச்எஃப் டான் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் பஜாஜ் சிடி 100 பைக்கின் விலை அமைந்துள்ளது.
Bajaj CT100 Price List :
வேரியன்ட் | புதிய விலை | பழைய விலை | வித்தியாசம் |
CT100 B | ரூ. 30,174 | ரூ. 32,653 | ரூ. 1939 |
CT100 KS Alloy | ரூ. 31,802 | ரூ. 38,637 | ரூ. 6835 |
CT100 ES Alloy | ரூ. 39,885 | ரூ. 41,997 | ரூ. 2112 |
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)