முதன்முறையாக 2017 துபாய் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட உலகின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக ரூ.14.33 கோடி ஆரம்ப விலையில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கார்ல்மேன் கிங் எஸ்யூவி
சீனாவை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ஐஏடி ஆட்டோமொபைல் டெக்னாலஜி நிறுவனம், ஐரோப்பியாவின் தொழிற்நுட்ப குழு ஒன்றுடன் இணைந்து சுமார் 1800 நபர்களின் கூட்டணியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஃபோர்டு F-550 பிளாட்ஃபாரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வேச அளவில் உள்ள முன்னணி பெரும் கோடிஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த எஸ்யூவி மாடல் , மிக நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக எஸ்யூவி விளங்குகின்ற, இந்த மாடல் ஃபோர்ட் நிறுவனத்தின் F-550 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் 6 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ள எஸ்யூவி எடை 4000 கிலோ கொண்டதாகவும், கூடுதலாக புல்லட் ப்ரூஃப் பெற்ற கிங் எஸ்யூவி எடை 6000 கிலோ கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. F-550 டிரக்கில் இடம்பெற்றுள்ள 400 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 6.8 லிட்டர் வி10 எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக 140 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.
3691 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள இந்த எஸ்யூவி மிக தாரளமான இடவசதி கொண்டதாக வந்துள்ள இந்த மாடலில் உயர்தர சவுன்ட் சிஸ்டம், அல்ட்ரா ஹெச்டி 4K தொலைக்காட்சி, பிரைவேட் சேஃப்பாக்ஸ், போன் புராஜெக்ஷன் சிஸ்டம், செயற்கைகோள் தொலைக்காட்சி, காபி மெஷனின், டீபார்ட்டி கொண்டாடும் வகையிலான ரூம் ஆகியவற்றை பெற்று விளங்கும் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஸ்டீல் மற்றும் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ள கார்ல்மேன் கிங் எஸ்யூவி விலை 1.56 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங்க் , இந்திய மதிப்பின் அடிப்படையில் ஆரம்ப விலை ரூ.14.33 கோடியாகும்.
கார்ல்மேன் கிங் எஸ்யூவி வீடியோ