இந்தியளவில் கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர இரு சக்கர வாகன விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018 செய்தி தொகுப்பில் பற்றி அறிந்து கொள்ளலாம்.
டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018
100 – 125 சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனமும், இதே பிரிவு பைக் சந்தையில் ஹீரோ நிறுவனமும் தொடர்ந்து முதலிடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. நாட்டில் அதிகப்படியாக விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா மற்றும் ஹீரோ நிறுவனத்திற்கு இடையே கடுமையான போட்டி நிகழந்து வரும் சூழ்நிலையில் ஹோண்டா சிபி ஷைன் மாடல் 82,189 அலகுகளை விற்பனை செய்து பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதன் போட்டியாளரான ஹீரோ கிளாமர் 6வது இடத்தில் உள்ளது.
வழக்கம்போல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் 10வது இடத்தில் இடம்பெற்று மொத்தம் 48,557 அலகுகளை விற்பனை செய்துள்ளது. மேலும் பல்சர் வரிசை 60,772 அலகுகளை பிப்ரவரி 2018யில் விற்பனை செய்திருக்கின்றது.
டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018
வ.எண் | மாடல் | பிப்ரவரி -2018 | ஜனவரி -2018 |
1 | ஹோண்டா ஆக்டிவா | 2,47,377 | 2,43,826 |
2 | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,38,722 | 2,31,356 |
3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,65,205 | 1,71,167 |
4 | ஹோண்டா CB ஷைன் | 82,189 | 82,390 |
5 | டிவிஎஸ் XL சூப்பர் | 71,931 | 76,309 |
6 | ஹீரோ கிளாமர் | 66,064 | 75,533 |
7 | டிவிஎஸ் ஜூபிடர் | 64,534 | 64,990 |
8 | ஹீரோ பேஸன் | 61,895 | 61,661 |
9 | பஜாஜ் பல்சர் வரிசை | 60,772 | 56,919 |
10 | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 48,557 | 53,221 |
மறக்காம படிங்க – விற்பனையில் டாப் 10 கார்கள் பிப்ரவரி 2018