இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்குகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய மேட் பர்ப்பிள் கலர் கொண்ட டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரை ரூ. 49,211 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 தோற்ற அமைப்பு மற்றும் எஞ்சின் உட்பட நுட்ப விபரங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள மேட் பர்ப்பிள் நிறத்தில் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய நிறம் பெற்ற ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் 7.8 bhp பவர் மற்றும் 8.4 Nm டார்க் வழங்குகின்ற 109.7 சிசி ஒற்றை சிலண்டர் பெற்ற ஏர்-கூல்டு இஞ்சின் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் டயரில் 110மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றிருப்பதுடன் டயரில் 130 மிமீ டிரம் பிரேக்கினை கொண்டிருக்கின்றது.
19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதியுடன், யூஎஸ்பி சார்ஜர், பகல் நேர எல்இடிரன்னிங் விளக்குகளுடன் கிடைக்கின்றது.
சந்தையில் விற்பனையில் உள்ள விலையில் எந்த மாற்றமும் செய்யப்படலாம், அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிறத்துடன் ஆக்டிவா ஐ, சுசூகி லெட்ஸ், ஹீரோ பிளெஷர் ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, நவீன தலைமுறையினர் விரும்புகின்ற பல்வேறு அம்சங்களை கொண்ட சக்திவாய்ந்த 125சிசி எஞ்சினை பெற்ற டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது.