அமெரிக்காவைச் சேர்ந்த பிரசத்தி பெற்ற யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் 223சிசி எஞ்சின் பெற்ற இரு க்ரூஸர் பைக் மாடலை ரூ.1.10 லட்சம் விலையில் யூஎம் ரெனிகேட் டியூட்டி S , யூஎம் ரெனிகேட் டியூட்டி ஏஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.
யூஎம் ரெனிகேட் டியூட்டி S , டியூட்டி ஏஸ்
2018 ஆட்டோ எக்ஸ்போவாகன கண்காட்சியில் யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மொத்தம் மூன்று புதிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலாக விளங்கும் ரெனிகேட் தோர் ஆகும்.
டியூட்டி எஸ், டியூட்டி தோர் ஆகிய இரு மாடல்களிலும் 223சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
யூஎம் ரெனிகேட் ஏஸ், யூஎம் ரெனிகேட் S பைக்குகளின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 41 கிமீ என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் நேர்த்தியான எல்இடி விளக்குகளை பெற்று விளங்கும் இந்த இரு க்ருஸர் பைக்குகளிலும், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்புறத்தில் வழங்கப்பட்டு 120/80 ஆர்17 டயரும், பின்புறத்தில் இரண்டு ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள், 130/90 ஆர்15 டயரும் இணைக்கப்பட்டுள்ளது.
10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள இரு மாடல்களின், 1,360மிமீ வீல் பேஸ், 180மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருக்கின்றன.
அடுத்த சில வாரங்களில் டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டு இரு மோட்டார்சைக்கிள்களும் இந்த வருடத்தின் மத்தியில் டெலிவரி தொடங்கப்படும்.