இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர் கன்வெர்டிபிள் எஸ்யூவி கான்செப்ட் மாடலை மிகவும் அழகான வடிவமைப்பினை கொண்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா டியூவி ஸ்டிங்கர்
மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனம், டியூவி 300 எஸ்யூவி அடிப்படையிலான மாடலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியூவி ஸ்டிங்கர் கன்வெர்டிபிள் எஸ்யூவி பெரும்பாலான மோட்டார் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முகப்பு அமைப்பில் மிக நேர்த்தியான மஹிந்திராவின் பாரம்பரிய கிரில் அமைப்பை கொண்டதாக டியூவி 300 எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கம்பீரமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் பாடி கிளாடிங் பெற்றிருப்பதுடன் முகப்பில் நேர்த்தியான எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் செங்குத்தான மிகவும் அகலமான இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ட்டர் மஹிந்திரா கனெக்ட்டிவிட்டி டெக் ஆதரவினை கொண்டதாக வழங்கப்பட்டு 2+2 இருக்கை அமைப்புடன் பின்புற இருக்கை வரிசையின் நிறைவில் ஸ்பேர் வீல் வழங்கப்பட்டுள்ளது.
டியூவி ஸ்டிங்கர் கன்வெர்டிபிள் எஸ்யூவி மாடலில் மஹிந்திராவின் எம்-ஹாக் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 140 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கான்செப்ட் நிலை மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிங்கர் எஸ்யூவி உற்பத்தி நிலைக்கு செல்ல கால அளவு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைத்தவிர மஹிந்திரா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் மஹேந்திரா ஜி4 ரெக்ஸ்டான் மற்றும் மின்சார வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது.