உலகின் முதன்மையான இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் 125சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ஹீரோ டூயட் 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹீரோ டூயட் 125 & ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 125சிசி சந்தையை குறிவைத்து முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ நிறுவனம், முந்தைய மாடல்களான 110சிசி எஞ்சின் பெற்ற மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய இரு மாடல்களை 125சிசி எஞ்சினை கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு ஸ்கூட்டர்களிலும் 8.7hp பவர் மற்றும் 10.2Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடிகியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மிக முக்கியமாக இந்நிறுவனத்தின் எரிபொருளை சேமிக்கும் முறையான i3S (idle-start-stop tech) எனும் நுட்பத்தை கொண்ட மாடலாக வரவுள்ளது.
மிகவும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை பெற்ற மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு, வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி, சர்வீஸ் இன்டிகேட்டர், சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர் போன்றவற்றுடன் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான ஸ்டைலை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கொண்ட வேரியண்ட் விற்பனை செய்யப்படுகின்றது.
மெட்டல் பாடி பெற்ற ஹீரோ டூயட் 125 ஸ்கூட்டரில் டிரம் பிரேக்குடன், எல்இடி டெயில் விளக்கு, வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி, சர்வீஸ் இன்டிகேட்டர், சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர் போன்றவற்றுடன் கிடைக்கப் பெறுகின்றது.
வருகின்ற பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ஹீரோ டூயட் 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களும் மிக சவாலான விலையுடன் 125சிசி எஞ்சின் பெற்றதாக விளங்கும்.
அதைத் தவிர ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 200 ஆர், எக்ஸ்பல்ஸ் 200 உட்பட பல்வேறு விற்பனையில் உள்ள மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.