2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலை மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
யூஎம் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக்
உலகில் முதன்முறையாக பேட்டரியில் இயங்கும் வகையிலான க்ரூஸர் ரக மாடலை யூஎம் நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டதாக அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள மாடல்களின் தோற்ற அமைப்பை பகிர்ந்து கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மோட்டார் சைக்கிள் மாடலின் கான்செப்ட் வெளியிடப்பட நிலையில், இதன் நுட்ப விபரங்கள் மற்றும் அறிமுக தேதி போன்ற விபரங்கள் குறித்த தகவலை ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம்.
இதுதவிர, இந்நிறுவனம் வாகன கண்காட்சியில் இந்தியாவில் புதிய 230 சிசி க்ரூஸர் ரக மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் இந்த பைக் மாடல் ரூ.1.10 விலையில் அமைய வாய்ப்புள்ளதால் அவென்ஜர், தண்டர்பேர்டு 350 ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைய வாய்ப்புள்ளது.
மேலும் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம், ரெனிகேட் ஸ்போர்ட் எஸ், ரெனிகேட் மோஜேவ், ரெனிகேட் கமாண்டோ ,கமாண்டோ கிளாசிக் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிக்க ; Auto Expo 2018 News & Updates in Tamil