இந்தியாவின் விஇ வர்த்தக வாகன விற்பனை பிரிவு, கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக 6,712 அலகுகளை விற்பனை செய்து வால்வோ-ஜஷர் கூட்டணி 50.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
வால்வோ-ஐஷர் டிரக் விற்பனை நிலவரம்
இந்தியாவில் ஐஷர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் வால்வோ நிறுவனம், அபரிதமான விற்பனை வளர்ச்சி பதிவு செய்து வருகின்றது. முந்தைய வருடம் ஜனவரி 2017யில் மொத்தமாக 4449 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி 2018-யில், 6712 அலகுகளை விற்பனை செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 50.6 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனையில் ஐஷர் பிராண்டு டிரக்குகள் மொத்தம், 6010 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2017யில் 3796 அலகுகளை விற்பனை செய்திருந்தது. வால்வோ பிராண்டில் மொத்தம் 89 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய வருடத்தில் 66 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வால்வோ-ஐஷர் கூட்டணியில் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.