இந்தியாவில் பிரிமியம் ரக ஸ்போர்ட்டிவ் பைக்குகளை விற்பனை செய்து வரும் டுகாட்டி சூப்பர்பைக் தயாரிப்பாளர், புதிய டுகாட்டி பனிகேல் V4 பைக் மாடல் ஒன்றை ரூபாய் 20 லட்சத்து 53 ஆயிரம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
டுகாட்டி பனிகேல் V4
இந்தியாவில் இரண்டு விதமான வேரின்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பனிகேல் வி4 மாடலில் டாப் வேரியன்ட் மாடல் S கிரேட் ரூ.25.29 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு மொத்தம் 20 பைக்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மே 31ந் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான பரிசாக முதல் இரண்டு பேருக்கு ஜூன் மாதம் நடைபெற உள்ள டுகாட்டி ரைடிங் எக்ஸ்பிரியன்ஸ் ரேஸ்டிராக் பயற்சி மலேசியாவில் வழங்கப்பட உள்ளது.
டுகாட்டி நிறுவனத்தின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட உற்பத்தி நிலை மாடலாக வெளியிடப்பட்டுள்ள பனிகேல் வி4 பைக்கில் 214 HP ஆற்றலை வெளிப்படுத்தும் 1103cc V4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 124 Nm டார்க் வழங்குவதுடன், இதில் 6 வேக க்விக் ஷீஃப்ட் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகளுடன் கூடிய 300மிமீ பிரேக், பின்புறத்தில் ஒற்றை டிஸ்குடன் கூடிய 245 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் போஸ் ஏபிஎஸ் கார்னரிங் EVO, டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல் EVO, டுகாட்டி வீலி கன்ட்ரோல், டுகாட்டி பவர் லான்ச், டுகாட்டி ஸ்லைட் கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் உட்பட ரேஸ், ஸ்போர்ட் மற்றும் ஸ்டீரிட் ஆகிய ரேஸ் மோட்களுடன் பவர் மோடும் வழங்கப்பட்டுள்ளது.
டுகாட்டி பனிகேல் வி4 விலை பட்டியல்
Ducati Panigale V4 – ரூ.20.53 லட்சம்
Ducati Panigale V4 S Grade – ரூ. 25.29 லட்சம்