கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் அறிமுகத்தின் போது காட்சிப்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்டீரிட், பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் ஆகிய இரு மாடல்களின் விலை விபரத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2018 பஜாஜ் அவென்ஜர் 220
தொடக்கநிலை க்ரூஸர் சந்தையில் மிகவும் வரவேற்பு பெற்ற மாடலாக விளங்கி வரும் அவென்ஜர் 150,அவென்ஜர் 220 க்ரூஸ்,மற்றும் அவென்ஜர் 220 ஸ்டீரிட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக சமீபத்தில் சுசூகி இன்ட்ரூடர் பைக் விற்பனைக்கு வந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்ற அவென்ஜர் மாடல்களில் புதிய வடிவமைப்பை பெற்றிருந்தாலும் எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
இரு மாடல்களிலும் புதுப்பிக்கட்ட ஹெட்லைட் வடிவமைப்புடன், பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்டதாக வந்துள்ளது. புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு விபரங்களை அறிந்து கொள்வதுடன், 220 க்ரூஸ் மாடலில் பின்புற நில நிறுமும், 220 ஸ்டீரிட் மாடலில் ஆரஞ்சு நிறமும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், இரு ட்ரீப்மீட்டர், எரிபொருள் அளவு காஜ் உட்பட சர்வீஸ் ரிமைன்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது. மேலும் புதிய மூன் வெள்ளை நிறத்தில் கிடைக்க உள்ளது.
இருமாடல்களில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்கில் மாற்றங்கள் இல்லை. 19.03 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
பஜாஜ் அவென்ஜர் விலை
2018 அவென்ஜர் 220 க்ரூஸ் ரூ.93,786
2018 அவென்ஜர் 220 ஸ்டீரிட் ரூ.93,786
( எக்ஸ்-ஷோரூம் சென்னை )