காரின் உட்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வது எப்போதும் அவசியமான ஒன்றாகும். காரின் உட்புறம் எந்த நேரத்தில் அசுத்தமாகும் என்பது உங்கள் கட்டுபாட்டில் இருக்காது. இருந்தாலும், காரின் உட்புறத்தில் திடீரென ஏற்படும் அசுத்தம் அல்லது பாதிப்புகளை எதிர் கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். காரில் பயணம் செய்யும் குழந்தைகள் காரின் உள்ளேயே வாந்தி எடுத்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த வாந்தியை சுத்தம் செய்வது கடினமான செயல் என்ற போதும், இதை எப்படி எளிதாக செய்வது என்பது குறித்த டிப்ஸ்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் காரில் உள்ள வாந்தியை எப்படி சுத்தம் செய்வது?
முதலில் செய்ய வேண்டியது கையில் கையுறை அணிவதுடன், முகத்தில் முகமூடி ஒன்றை அணித்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் வாந்தி வாடையுடன் இருக்காது. இருந்தாலும், அசுத்தமாக உள்ள காரின் உள்ளே செல்லும் போது அங்குள்ள வாடை காரணமாக மயக்கம் ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. காரின் உள்புறத்தை சுத்தப்படும் பணிகளை முழுமையாக செய்து முடிக்கும் வரை கையுறை மற்றும் முகமூடிகள் அணிந்திருக்க வேண்டும். நீங்கள் அணியும் முகமூடிகளில் நல்ல மணம் வீசு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்து கொள்வது நல்லது.
இரண்டாவதாக, நீங்கள் கார் அப்ஹோல்டிரி கிளினரை பயன்படுத்த வேண்டும். இந்த கிளினர்களில் கெமிக்கல் கலந்து இருப்பதால், அந்த திரவங்கள், சீட்களில் படர்ந்து விட வாய்ப்புள்ளது. இதனால், நீங்கள் அருகில் உள்ள ஒர்க் ஷாப் அல்லது உள்ளூர் ஷாப்களில் விற்பனை செய்யப்படும் கிளீனிங்
கெமிக்கலை வாங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிளீனிங் செய்யும் போது, நீங்கள் சீட்கள் மற்றும் சீட் கவர்களையும் செக் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லெதர் பொருத்தப்பட்டிருந்தால், நீங்கள் நல்ல லெதர் கன்டெய்னர்களை வாங்க வேண்டியது அவசியமாகும். லெதர் கன்டெய்னர்கள் சாதாரண கிளீனிங் பொருட்களை விட சிறிதளவு விலை அதிகமாக இருந்தாலும், இதன் மூலம் கிளீனிங் வேலைகளை சிறப்பாக செய்து கொள்ள முடியும்.
காரில் இடம் பெற்றுள்ள முக்கிய பாகமான கார்பெட் இருக்கிறது. இது அதிகமாக மற்றவர்கள் கண்ணில் படும், எனவே கார்பெட்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். காரின் உள்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள கார்பெட்கள் பெரிதும் உதவும் என்பதால் இதை முழுமையாக கிளீனிங் செய்ய, கார்பெட்களை காரில் இருந்து அகற்றி, கார்பெட் கிளீனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சிறப்பான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், விரைவாக காய்ந்து விடும். உங்கள் காரில் உள்ள கார்பெட்டை உங்களால நீக்க முடியவில்லை என்றால், அதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியமாகும்.
கார்பெட் கிளீனிங் செய்ய பல்வேறு நிறுவனங்களில் கிளீனிங் பொருட்கள் கிடைக்கின்றன. இதில் உங்கள் காரின் கார்பெட் கலருக்கு பொருந்தும் வகையிலான கிளீனர்களை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும். கார்பெட்டை கிளீன் செய்யும் போது, முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அரைகுறையாக சுத்தம் செய்தால், கார்பெட்டின் சில இடங்களில் கரை படர்ந்து விடும். தேவையான பொருட்களை தயாராக வைத்து கொண்ட பின்னர் நீங்கள் சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்கலாம்.
வாந்தியில் உள்ள திடப்பெருட்கள் கெமிக்கல் எதுவும் பயன்படுத்தாமல் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு கையில் ஷாப்பிங் பேக் ஒன்றை வைத்து கொண்டு, மற்றொரு கையில் திடப்பொருட்களை அகற்ற உதவும் ஏதாவது ஒரு பொருளை வைத்து இந்த பணியை செய்ய வேண்டும். திடப்பொருட்களை அப்படியே எடுத்து மற்றொரு கையில் உள்ள ஷாப்பிங் பேக்கில் போட்டு அகற்ற வேண்டும். இதே போன்று, மூன்று அல்லது நான்கு முறை செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு திடப் பொருட்களையும் அகற்றி, பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக்கில் போட்டு, அதை மூடி குப்பை தொட்டில் போட்டு விட வேண்டும். இதன் மூலம் பெரும்பாலான வாந்திகள் அகற்றப்பட்டு இருக்கும், இருந்தாலும், வாடை மற்றும் கரைகள் இன்னும் படிந்திருக்கும்.
இவற்றை சுத்தம் செய்ய கெமிக்கல்களை பயன்படுத்தும் முன்பு, நீங்கள் திடப் பொருட்களை அகற்றும் போதும் அந்த பகுதியில் எதுவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக என்பது உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற திடப் பொருட்களை அகற்றும் போதும், இரும்பால் செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்துவதை விட பிளாஸ்டிக்களால் உருவாகப்பட்ட கருவிகளை பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். ஏன்என்றால், இரும்பாலான கருவிகள், காரின் உள்பகுதியை கிழித்து இருந்தால், கெமிக்கல் கொண்டு சுத்தம் செய்யும் போது உட்புறத்தில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்.
இதற்கு அடுத்ததாக, உறிஞ்சும் தன்மை கொண்ட துண்டு துணியால், வாந்தி பரவிய பகுதிகளில் அழுத்தி எடுக்க வேண்டும். வாந்தி எடுத்த இடங்களில் இந்த துணியால் போதுமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும். காரில் அதிகளவு ஈரப்பதம் இல்லாத அளவில் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும், துணிகளில் எந்தவித தூசும் இல்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இந்த துணிகள் ஏற்கனவே பயன்படுத்தவைகளாக இல்லாமல், புதிய துணிகளை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
பெரிய அளவிலான துணிகளை பயன்படுத்துவது, எல்லா பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் அகற்ற உதவுவதோடு, கரைகளையும் அகற்ற உதவும். அடுத்ததாக, கடுமையான வாடையை அகற்ற வேண்டும். இதற்கு எளிமையான வழி, ஒரு பேக்கிங் சோடாவை எடுத்து அசுத்தமான இடத்தின் மீது, அடர்த்தியாக பூச வேண்டும். இதே நிலையில் 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஏன்என்றால், மொத்த வாடையும் இதனால் முழுவதுமாக அகற்றப்பட்டு விடும். இந்த பேக்கிங் சோடாகள் இயற்கையிலேயே வாடைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும், சுத்தம் செய்யும் பகுதியில் எந்த கரையையும் விட்டு செல்லாது. இதுமட்டுமின்றி இது எளிதில் கிடைக்க கிடைப்பதுடன், குறைந்த விலையிலும் கிடைக்கும்.
உங்கள் காரின் உள்அலங்காரங்களை பொறுத்து, நீங்கள் பேக்கிங் சோடாவை உலந்த நீரிலோ அல்லது வினிகரிலோ கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் இதில் உள்ள கெமிக்கலின் அளவுவை குறைக்கலாம். இவை இரண்டுமே காரின் உட்புறத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும். பேக்கிங் சோடா பூசி, 30 நிமிடங்கள் கழித்து, ஈரமான துணியை பயண்படுத்தி அழுக்கு பகுதியை துடைக்க வேண்டும். இதற்கு உடல் ரீதியான திறன்கள் தேவைப்படும். இதனால் உங்களுக்கு தோல்பட்டையில் வலி ஏற்பட்ட வாய்ப்புள்ளது. ஆனாலும் இது கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.
இதை செய்து முடித்ததும், காரை சுத்தம் செய்யும் பணிகளில் உங்களது முக்கியமான வேலைகள் நிறைவு பெற்று விட்டது. தற்போது நீங்கள், சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி அசுத்தமான இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த பணியின் போது முழு பக்கெட் தண்ணீரையும் காரின் உள்ளே ஊற்றி விட கூடாது. இதனால் சீட்கள் தேவையின்றி ஈராமாகி விடும். சிறிய கப்களை பயன்படுத்தி இந்த சுத்தப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால் உங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றதாகவே கருதப்படும். சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின்னர் உங்கள் காரை முறையாக வெண்டிலேட் செய்வது அவசியம். கார் முழுமையாக ஈரப்பதம் இன்றி காய, காரின் கதவுகளை திறந்து விட்டு காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே செல்லுமாறு நிறுத்தி வைக்க வேண்டும்.
வாந்தியால் ஏற்பட்ட வாடை அல்லது கரை எதுவும் எஞ்சி இருந்தால், இப்படி காரின் கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் விரைவாக அகற்றி விட முடியும். காரின் உள்ளே இருக்கும் வாந்திகளை சுத்தம் செய்வது எளிதான காரியம் அல்ல என்பதையும், அதற்கு வலுவான மனநிலை மட்டுமின்றி அதிக திறனும் தேவை என்பதை தற்போது நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
மனிதர்களை பொறுத்தவரை இதுபோன்று விபத்துகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி காரை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள, சில மணி நேரங்களையும், பணத்தையும் செலவிட வேண்டியது அவசியமாகும்.