கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமீபத்தில் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிதுல்ள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்யும் பணிகளை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்ஷிப்களிலும், இந்த இலவச சர்வீஸ் பணிகள் செய்யப்படும் என்றும், சிறியளவிலான ரிப்பேர்கள் மற்றும் பில்டர்கள் மற்றும் கியாஸ்கேட்கள் போன்ற பாதிக்கப்பட்ட பாகங்கள் மாற்றி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் பாகங்கள் மாற்றி கொடுப்பதும் இந்த இலவச சேவையின் போது மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவன உயர்அதிகாரி எரிக் வாஸ், கேரளா வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, பஜாஜ் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாகனங்களை வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த இலவச சர்வீஸ் பணிகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் டெக்னிசியன்களை கேரளாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதுமட்டுமின்றி பெரியளவில் பாதிப்புக்குள்ளான வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பெற தேவையான ஆவணங்களையும் தயார் செய்யும் பணிகளும் நிறுவனம் சார்பில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.