ISI தர சான்று பெறாத 2 சக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட்களுக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு பின்னர் தடை விதிக்கப்பட உள்ளது என்று இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஹெல்மெட்களை தயாரிப்பவர்களுக்கு தண்டனையாக 2 ஆண்டு ஜெயில் அல்லது 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தர விதிகள் வரும் 2019 ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், தங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை 1.5kg எடை கொண்டதாக தயாரிக்காமல் 1.2kg எடை கொண்டதாக தயாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ISIஅல்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது குற்றமாகும். புதிய ஹெல்மெட்களில், ISI தரம் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த மூலம் ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.