17 நகரங்களில் சோதனை முறையில் எலெக்ட்ரிக் வாகன (EV) பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யும் முறையை சீனா தொடங்க உள்ளதாக தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நோட்டீசை, நேற்று தங்கள் இணைய தளத்தில் தொழிற்சாலை மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த நோட்டீசில், இந்த முறை தொடங்கப்பட்ட உள்ள நகரங்களில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், ரீசைக்கிளிங் சேவை மையங்களை திறப்பதோடு, பேட்டரி தயாரிப்பாளர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்கள் மற்றும் ஸ்கிராப் வியாபாரிகள் இந்த ரீசைக்கிளிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, EV பேட்டரிகளை திரும்ப பெற மொத்த தொழிற்சாலைகளையும் ஒன்றிணைந்து, முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட வேண்டும் என்றும், பேட்டரி ரீசைகிளிங் பணிகளில் புதியாக வர உள்ள பேட்டரி நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் சீனாவில் உள்ள ரீசைக்கிளிங் மையங்களை முழுமையாக பயன்படுத்தி நிலையான வளர்ச்சி ஊக்குவிக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி ரீசைக்கிளிங் பணிகளுக்கு கொள்கைகள் வரையறை செய்து ஆதரவளிக்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ள அமைச்சகம், இதுமட்டுமின்றி தற்போதுள்ள வரி ஊக்கத்தொகை மற்றும் புதுமையான புதிய நிதிய முறைகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மசோதாவை ஏற்கனவே வெளியிட்டுள்ள அமைச்சகம், புதிகாக “traceability management platform” ஒன்றை உருவாக்கியுள்ளது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கமே, எலக்ட்ரிக் கார் பேட்டரிகள் உருவாகப்பட்டது முதல் அகற்றும் வரை அவற்றின் முழு லைப் சைக்கிளை கண்காணிப்பதேயாகும்.
வரும் 2020ம் ஆண்டுக்குள் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை 2 மில்லியனாக கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கடந்த மார்ச் இறுதியில் 102 நிறுவனங்கள், 355 பல்வேறு மாடல்கள் வாகனங்களை தயாரித்துள்ளதை தொடர்ந்து, தயாரிப்பு துறையில் கண்முடித்தனமாக வளர்ச்சியை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்துறை அமைச்சகம் இந்த வாரம் வெளியிட்ட புள்ளி விபரப்படி, சீன இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 200 எண்ணிகையிலான புதிய ஆற்றல் வாகனங்களை தயாரித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 94.9 சதவிகிதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் வாகன விற்பனையும் இரண்டு மடங்காக உயர்ந்து 4 லட்சத்து 12 ஆயிரம் யூனிட்களாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2020ம் ஆண்டில் ஆண்டு லித்தியம் பேட்டரி வேஸ்ட் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரமாக உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.